Thursday, 7 June 2012

சிக்கிட்டாண்டா அடிமை இனி ஜோக்ஸ் அடிக்கலாம்.

அமைச்சர்: நான் ஊழல் பண்ணி வங்கி கொடுத்த டம்மி துப்பாக்கிய வச்சே தீவிரவாதிகளை பிடிச்சுட்டேங்களே! சபாஸ்டி.ஐ.ஜி. அது ஒண்ணுமில்லை, கமிஷன் கிடைக்குதேன்னு அதை அவுங்ககிட்ட வித்துட்டேன். பாவம் அதை நம்பி ஆடு திருட போனஇடத்தில அம்புட்டுகிட்டாங்க சாரே!
"திடீருன்னு நம்ம நாட்டோட விலைவாசி இப்படி குறைஞ்சிருச்சே!" "அதுவா! நேத்திலயிருந்து தீவிரவாதிகயெல்லாம் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்றதா அறிவிச்சாங்கள அதான்"

"எங்க ஊர்ல தீவிரவாதிகளைப் பிடிக்க 300 கோடி ஒதிக்கி தீர்மானம் போட்டாங்களே! உங்க ஊர்ல எப்படி?" "தீவிரவாதிகளை சரணடையச் சொல்ல மொபைலுக்கு மிஸ்ட் கால் கொடுத்து காத்துகிட்டுயிருக்கோம்"

{தீவிரவாதக் கூட தலைவனிடம் போனில்....}
தீ.வா.1: ஹலோ, நான் ஓரே குண்டுல ஒம்பது கோடி ரூபாயை நாட்டுக்கு நட்டம்மக்கிட்டு தப்பிச்சு வந்துகிட்டுயிருக்கேன். ஓவர்.
தீ.வா.2: ஹலோ,நான் தான் அந்த குண்டை வச்சேன்னு போய் சொல்லி சரணடைஞ்சு. எனக்கு பாதுகாப்பு, பரிவர்த்தனை, கோர்ட்டு, கேஸ், வாய்தா, கருணை மனுன்னு கஜானாவை ஒரு வழிப் பண்ணிக்கிட்டுயிருக்கேன். ஓவர்.

பாதுகாப்பு ஆலோசகர்:நீங்க பாதுக்காப்புக்காக ஏதோ செக்யூரிட்டி சர்வீஸ்க்கு போன் பண்ணதை தீவிரவாதிங்க ஒட்டுக் கேட்டுட்டாங்க!அமைச்சர்: நல்லவேளை தப்பிச்சேன்! நான் பாதுகாப்பு கேட்டதே அவுங்ககிட்டதான்.

"பாஸ்! எல்லா வண்டி, லாரியையும் செக் பண்ணி அனுப்புறாங்க, என்னால ஊருக்குள்ள போகமுடியலை.""கவலைப் படாத ஒரு ருபாய் அரிசிய கடத்திக்கிட்டு ஒரு லாரி வரும் அதில லிப்ட் கேட்டு வந்திரு."
"தீவிரவாதிகளுக்கு அரசு இலவச வீடு கட்டித் தரணும்னு ஏன் கேட்குறீங்க?""அந்த வீடுகளெல்லாம் சீக்கிரமா இடுஞ்சு போயிரும்ல அதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்"

ஹலோ தீவிரவாதி அங்கிள் என்னை வந்து கடத்திட்டுப் போங்க இந்த ஊர்ல குடிக்கக்கூட தண்ணியில்ல அப்படியா! காண்ட்ராக்ட முடிய ஆறு மாசம் இருக்கும் அதுக்கப்புறமா பார்க்கலாம்.

"என்ன சார் பால் சொம்பு காணமுன்னு தீவிரவாதி மேல கேஸ் போட்டுருக்கீங்க?""என்னா பண்ணுறது பெரிய கேஸா போட்டா தீர்ப்பு வரக்குள்ளையும் எனக்கு வயசாகி பால் ஊத்திருவாங்களே"

ஆனா பாருங்க! தீவிரவாதிகளை வச்சு ஜோக்கடிக்களாமுனு நினைச்சா நம்மள வச்சுத் தான் காமெடியே நடக்குது
"தீவிரவாதிகள் சுட்டுக்
கொல்லப்படுகிறார்கள்
திரைப்படங்களில் மட்டும்"

வீடுக்கு ஆட்டோ அனுப்புபவர்கள் தொலைந்து போன மனித நேயத்தையும் சேர்த்து அனுப்புங்க சாமியோவ்

No comments:

Post a Comment