Saturday, 2 June 2012

இன்றைய குடியரசு நாளைய வல்லரசு ஆகுமா..?

அரசியல்  வா(வியா)தியை நாற்காலியை விட்டு
ஏலச்செய்யும் தேசிய கீதத்திருக்கு தலை வணங்குகிறேன்..
 
செய்திகளை படித்து மனம் வெதும்பும்
மனங்களின் செயல்களில் செய்தியகிவிடுகின்றன..
 
பொழுதுபோக்கு சாதனம் பொழுது போக மட்டுமே,
ஆனால் இன்று நாள் பொழுதையும் போக்குகின்றன..
 
கல்வி கடன் பெற விண்ணபித்தேன்,
அவன் என் மதிப்பெண்ணை பார்க்கவில்லை
என் சொத்து மதிப்பெண்ணை  பார்த்தான்..
 
வாக்கு சேகரிக்க புதுத்திடங்களை வகுத்த அரசியல்வாதி,
வாக்கு பெற்றபின் தனித்திட்டம் தீட்டினால்..!
என்ன ஆகும் இந்தநாடு இந்தியநாடு..
 
வேளாண் நிலத்தை ஊழுதேன்
நவீனம் என்றான் உழுது வாகனதைக்காட்டி..
ஆட்களை குறைத்தான் நெள்ளருப்பு  வாகனதைக்கட்டி..
விற்றுவரபோனன்..
வாங்க ஆள் இல்லை விலைவாசி ஏற்றம் என்றான்..
 
உண்ண உணவு,
உடுத்த உடை,
இருக்க இடம்
இவற்றை இழக்க செய்து..
 
எண்ணம் எழுத்து,
செயல் சிந்தனை,
நேசித்த நீ தானே நாடு கடத்தி கொள்கிறாய்..
 
வல்லரசு என்பது தொழில்த்துறை,
வேளாண்துறை,
கல்வி,
என அனைத்தும் ஓங்கி நிற்பது,
ஆனால் இங்கோ சுயநலம் மட்டுமே ஓங்கி நிற்கிறது..
 
tamilan thangaraj..
02.06.2012

No comments:

Post a Comment