Saturday, 25 August 2012

தாய்---குழந்தை


இலங்கை ராணுவத்தின் விமான தாக்குதலில் இருந்து தன் குழந்தையை காப்பாற்றுவதற்காக தன்னையே கேடயமாக்கி கொண்ட ஒரு தமிழ்த் தாய்......!!!
 


 
தாய்மொழியினைக்
கற்றுக்கொள்ளும்
முன்
தனது
மொழியினைத் தன் தாய்க்குக்
கற்றுத்தருகிறது

குழந்தை..!



மனித உயிர் காக்க கண்டுபிடிக்கப்படும் மருந்தைக் கூட எலியின் உடம்பில் சோதிக்கிறது மருத்துவ உலகம்.

ஆனால்
மனிதம் மறந்த இந்த அயோக்கியர்களின் துப்பாக்கி ரவைகள் சோதிக்கப்படும் இடம் என் உடல் தானோ...!
 



கருவறைக்குள் 
என்னை
சிறையடைப்புச்
செய்தவளே..

இருட்டறைக்குள்
எத்தனைநாள்
எனை பூட்டி வைப்பாய்..?

ஆனால் என்ன ஆச்சர்யம்..!
மூச்சு முட்டவில்லையே..!

புரிந்துவிட்டது-எனக்கு
நீ தந்தது
பாசம் மட்டுமல்ல..
உனது சுவாசமும்தான்..

உன்னை பத்து மாதம்
கடந்து பார்க்க
பொறுமையில்லை..
அதனால்தான்
வந்துவிட்டேன்
எட்டே மாதங்களில்..

வந்து பார்த்த
பின்புதான்
நொந்துகொண்டேன்..
சிரிக்கவேண்டிய
உன் முகத்தில்
ஏனோ வலிகலந்த
வேதனையின் ரேகை..

உன் வயிற்றில்கூட
தையல்ரேகை..

பதறுகிறதென்
பிஞ்சு மனம்..

என் அழுகை சத்தம்
கேட்கிறதா அம்மா உனக்கு..?

இது பால்கேட்டு அழும்
பசியழுகையல்ல..!

உன்னை
வேதனைப்படுத்தி
குறையாய்
பிறந்ததில் வந்த
குற்ற உணர்வழுகை..


இறைவா......
அறியாமல்
நான்செய்த பாவம்
போக்க
ஒரு
சந்தர்ப்பம்கொடு..

நான்
வேண்டுமானால்
திரும்பவும் கருவறை
சென்று
இருமாதம் கழித்து
வருகிறேன்..

-
குறைபிரசவக் குழந்தை




அன்பு மகள்
இட்ட
விபூதியை
அழியாமல்
பார்த்து
கொள்கிறேன்

ஒரு
பகுத்தறிவாளனாய்
இருந்த
போதும் ....




நனைந்தால்
உடம்புக்கு
ஆகாது என்று
வீட்டுக்குள்

பொம்மையை
விட்டுவிட்டு
தான்
மட்டும் சென்று
மழையில்
ஆடுகிறது
குழந்தையின்

தாய் மனசு





குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்ததிலிருந்தே பொய்யும் ஆரம்பிக்கும். பொய் சொல்வதற்கான தண்டனைகளையும் மன்னிப்புகளையும் சௌகரியத்தையும் பொருத்து அந்தத் 'திறமை' வளரும். பொய் இல்லையேல்..? யோசித்துப் பாருங்கள், இலக்கியமே இல்லை, காதல் இல்லை, சண்டை இல்லை, விளம்பரம் இல்லை. ஒரு நாட்டின் பொருளாதாரமே பொய் சார்ந்தது.

கம்பர்
சொன்னது போல் "உண்மை இல்லை பொய் உரை இயலாமையால்"



உம் தாய்மைக்கு தலை வணங்குகிறேன் ... :)




பசும் தங்கம்
புது
வெள்ளி
மாணிக்கம்
மணிவைரம்
அவை
யாவும்
ஒரு
தாய்க்கு ஈடாகுமா
விலை
மீது விலை
வைத்துக்
கேட்டாலும்
கொடுத்தாலும்

கடை
தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா

ஈரைந்து
மாதங்கள்
கருவோடு

எனைத்தாங்கி

நீ
பட்ட பெரும்
பாடு
அறிவேனம்மா
ஈரேழு
ஜென்மங்கள்
எடுத்தாலும்

உழைத்தாலும்

உனக்கிங்கு
நான் பட்ட
கடன்
தீருமா
உன்னாலே
பிறந்தேனே

அம்மா
என்றழைக்காத
உயிரில்லையே

அம்மாவை
வணங்காது
உயர்வில்லையே

நேரில்
நின்று பேசும்
தெய்வம்

பெற்ற

தாயன்றி
வேரொன்று
ஏது


அம்மாவின்
அன்பு ஞாபத்திற்கு





No comments:

Post a Comment